நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்கும் நடிகர் மாதவனுக்கு நோட்டீஸ்


நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்கும் நடிகர் மாதவனுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 1 Nov 2018 11:30 PM GMT (Updated: 1 Nov 2018 8:05 PM GMT)

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது ரகசியங்களை விற்றதாக தேச விரோத வழக்கு தொடரப்பட்டு பிறகு அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சினிமா படமாக தயாராகிறது.

இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் கதை உரிமை தன்னிடம் இருப்பதாகவும், தனது அனுமதி இல்லாமல் படமாக்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் மனு கொடுத்தார். இவர் பூ, களவாணி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். கேரள நாட்டிளம் பெண்களுடனே, தேநீர் விடுதி ஆகிய படங்களை டைரக்டும் செய்துள்ளார்.  ஆனாலும் எதிர்ப்பை மீறி படமாக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதைத்தொடர்ந்து மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்ப போவதாக எஸ்.எஸ்.குமரன் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

‘‘20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை தொலைக்காட்சி தொடராக தயாரித்தேன். ஆனால் சில சட்ட பிரச்சினைகளால் அது வெளியாகவில்லை. இதனால் எனக்கு பெரிய அளிவில் நஷ்டம் ஏற்பட்டது. எனது நிலையை மாதவனிடம் தெரிவித்தபிறகும் அவர் பிடிவாதமாக படத்தின் தொடக்க விழாவை நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

எனது அனுமதி இல்லாமல் நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்க கூடாது. எனவே மாதவன் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story