சினிமா செய்திகள்

மீ டூ விவகாரம்: ஆண்களை துன்புறுத்தும் பெண்களுக்கு தண்டனை - சோனாக்சி சின்ஹா + "||" + Me Too affair: penalty for women harassing men - Sonaxi Sinha

மீ டூ விவகாரம்: ஆண்களை துன்புறுத்தும் பெண்களுக்கு தண்டனை - சோனாக்சி சின்ஹா

மீ டூ விவகாரம்: ஆண்களை துன்புறுத்தும் பெண்களுக்கு தண்டனை - சோனாக்சி சின்ஹா
மீ டூ விவகாரத்தில், ஆண்களை துன்புறுத்தும் பெண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என சோனாக்சி சின்ஹா கூறியுள்ளார்.


மீ டூ விவகாரம் நாட்டையே உலுக்கி வருகிறது. டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மீது இந்தி நடிகைகள் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் நானா படேகர் மீது தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார். பாலியல் புகாரில் சிக்கிய இயக்குனர்கள் படங்களில் நடிக்க மறுத்து அக்‌ஷய்குமார், அமீர்கான் ஆகியோர் விலகி உள்ளனர். தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா மீ டூ குறித்து அளித்த பேட்டி வருமாறு:-

“பெண்களிடம் ஆண்கள் தவறாக நடந்தால் அதை தட்டி கேட்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தவறு செய்கிற ஆண்களுக்கு 100 சதவீதம் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். என்னிடம் தவறாக நடப்பவர்களை நான் சும்மா விட மாட்டேன்.

அதே மாதிரி பெண்களால் எந்த ஆணாவது பாதிக்கப்பட்டால் அந்த பெண்களுக்கும் 100 சதவீதம் தண்டனை கொடுக்க வேண்டும். நீதி கிடைப்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் கூடாது. நியாயம் இரு சாராருக்கும் பொதுவாக வேண்டும். யார் மீது குற்றம்சாட்டு வந்தாலும் அதில் உண்மையை தெரிந்து கொண்ட பிறகுதான் மற்றவர்கள் அதுபற்றி வெளியே பேசவேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘மீ டூ’ விவகாரத்தில் மோதல்? - சவுகார் ஜானகிக்கு சின்மயி பதில்
மீ டூ விவகாரம் தொடர்பாக, சவுகார் ஜானகிக்கு சின்மயி பதில் அளித்துள்ளார்.
2. ‘மீ டூ’ விவகாரம்: முன்னாள் இந்திய அழகி பாலியல் குற்றச்சாட்டு
மீ டூ விவகாரம் தொடர்பாக, முன்னாள் இந்திய அழகி பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.
3. மீடு விவகாரம்: நாங்கள் ஆதாரங்களை வெளியிட்டு விடுவோம் எனக் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள் - சொர்ணமால்யா
மீ டூ விவகாரத்தில் நாங்கள் ஆதாரங்களை வெளியிட்டு விடுவோம் எனக் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள். எங்களிடம் ஆதாரங்கள் இருக்கிறது. ஆனால் வெளியிடமாட்டோம் என சொர்ணமால்யா கூறி உள்ளார்.
4. மீ டூ விவகாரம் : பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 2 பாதியார்கள் மீது மேகாலயா பெண் குற்றச்சாட்டு
பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 2 பாதியார்கள் மீது மீ டூ இயக்கம் மூலம் மேகாலயா பெண் குற்றம்சாட்டி உள்ளார்.
5. மீ டூ விவகாரம்: தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் -ஏ.ஆர்.ரஹ்மான்
மீ டூ விவகாரத்தில் தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறி உள்ளார்.