சினிமா செய்திகள்

ஊர்வசியை விவாகரத்து செய்த நடிகர் மனோஜ் கே.ஜெயன் எழுதிய சுயசரிதை + "||" + Manoj K.Jayen's biography

ஊர்வசியை விவாகரத்து செய்த நடிகர் மனோஜ் கே.ஜெயன் எழுதிய சுயசரிதை

ஊர்வசியை விவாகரத்து செய்த நடிகர் மனோஜ் கே.ஜெயன் எழுதிய சுயசரிதை
தமிழில் திருமலை, திருப்பாச்சி, திருட்டுப்பயலே, திமிரு, வில்லு உள்பட பல படங்களில் நடித்துள்ளவர் மனோஜ் கே.ஜெயன்.
மலையாளத்திலும் முன்னணி நடிகராக இருக்கிறார். மனோஜ் கே. ஜெயனும் நடிகை ஊர்வசியும் காதலித்து 1999–ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் 2008–ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஊர்வசியை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஆஷா என்பவரை 2–வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அம்ரித் என்ற மகன் உள்ளார். மனோஜ் கே. ஜெயனுக்கு இப்போது 52 வயது ஆகிறது. அவர் தனது வாழ்க்கை கதையை மலையாளத்தில் புத்தகமாக எழுதி இருக்கிறார்.


இதற்கு மாதா பிதா குரு தெய்வம் என்று தலைப்பு வைத்துள்ளார். இந்த புத்தகத்துக்கு நடிகர் மம்முட்டி முன்னுரை எழுதி இருக்கிறார். மனோஜ் கே.ஜெயன் கர்நாடக இசை குடும்பத்தில் பிறந்து சினிமாவுக்கு வந்தவர். புத்தகத்தில் சிறுவயது வாழ்க்கை, கர்நாடக இசையில் ஈடுபட்ட தனது குடும்பத்தினர் விவரங்கள், சினிமாவுக்கு வந்தது, ஆரம்ப கால கஷ்டங்கள், காதல், ஊர்வசியை திருமணம் செய்தது, குடும்ப வாழ்க்கை, போன்ற விவரங்களை குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்த அனுபவங்கள், வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகள் போன்றவையும் புத்தகத்தில் உள்ளன. இந்த புத்தகம் அவரது சுயசரிதை போல் உள்ளது என்று மம்முட்டி கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...