சினிமா செய்திகள்

டி.வி. நடிகர் விஜயராஜ் திடீர் மரணம் + "||" + TV Actor Vijayaraj sudden death

டி.வி. நடிகர் விஜயராஜ் திடீர் மரணம்

டி.வி. நடிகர் விஜயராஜ் திடீர் மரணம்
பழனியை சேர்ந்தவர் விஜயராஜ். இவர் முன்னணி இயக்குனர்கள் சிலரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி, கோலங்கள் ஆகிய டி.வி தொடர்களில் நடித்து பிரபலமானார். நாதஸ்வரம் தொடரிலும் நடித்துள்ளார். பரத்தின் எம்டன் மகன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.


தீபாவளி பண்டிகையை கொண்டாட இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவி குழந்தையுடன் சொந்த ஊரான பழனிக்கு விஜயராஜ் சென்று இருந்தார். அங்கு நேற்று காலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார். அவருக்கு வயது 43.

விஜயராஜ் மறைவு டி.வி. நடிகர்–நடிகைகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.