எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை மீண்டும் ஏற்க டைரக்டர் பாக்யராஜ் மறுப்பு


எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை மீண்டும் ஏற்க டைரக்டர் பாக்யராஜ் மறுப்பு
x
தினத்தந்தி 5 Nov 2018 11:15 PM GMT (Updated: 5 Nov 2018 5:41 PM GMT)

தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவராக பதவி வகித்த பாக்யராஜுக்கும் முன்னாள் தலைவர் விசுவுக்கும் சங்கத்தின் அறக்கட்டளை பணம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவராக பதவி வகித்த பாக்யராஜுக்கும் முன்னாள் தலைவர் விசுவுக்கும் சங்கத்தின் அறக்கட்டளை பணம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. விசு மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதனால் பாக்யராஜை விசு கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

அதன்பிறகு விஜய்யின் சர்கார் படத்தின் கதை திருட்டு பிரச்சினையில் பாக்யராஜுக்கும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசுக்கும் மோதல் ஏற்பட்டது. சர்கார் கதையும் இணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவரின் செங்கோல் கதையும் ஒன்றுதான் என்று பாக்யராஜ் கூறினார். இருவரையும் அழைத்து சமரசப்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டு அது தோல்வியில் முடிந்தது.

பாக்யராஜ் நடவடிக்கையை ஏ.ஆர்.முருகதாஸ் கண்டித்தார். பாக்யராஜ் மகன் சாந்தனுவையும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர். இதைத்தொடர்ந்து எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்தார். பதவி விலகலுக்கான காரணத்தையும் அறிக்கையாக வெளியிட்டார்.

ஆனால் பாக்யராஜின் ராஜினாமாவை திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் மீண்டும் தலைவர் பதவியை அவர் ஏற்றுக்கொள்வாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜினாமாவை திரும்ப பெறுவது இல்லை என்பதில் பாக்யராஜ் உறுதியாக இருப் பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் கூறப்பட்டது.

மீண்டும் தலைவர் பதவியை ஏற்க பாக்யராஜ் விரும்பவில்லை தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும்படி அவர் கூறிவிட்டார்.

Next Story