சினிமா செய்திகள்

சினிமா கேள்வி பதில் ! குருவியார் + "||" + Cinema Question and Answer : Kuruviyar

சினிமா கேள்வி பதில் ! குருவியார்

சினிமா கேள்வி பதில் ! குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, சத்யராஜ் தெலுங்கு படங்களில் நடிக்கிறாரே... அங்கே அவர் எப்படிப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்? (பி.அரவிந்தன், அவினாசி)

தெலுங்கு படங்களில் சத்யராஜ் வில்லன் வேடங்களை கூடுமான வரை தவிர்த்து விடுகிறாராம். கதாநாயகன் அல்லது கதாநாயகிக்கு அப்பாவாக பல படங்களில் அவர் நடித்து வருகிறார்!


***

‘சாமி–2,’ ‘சர்கார்’ ஆகிய இரண்டு படங்களிலும் கீர்த்தி சுரேஷ் சதை போட்டு குண்டாக தெரிகிறாரே...என்ன காரணம்? (எஸ்.தங்கராஜ், கொட்டாம்பட்டி)

பூரிப்புதான் காரணம்! அவருடைய அம்மாவுக்கு கிடைக்காத நட்சத்திர அந்தஸ்தையும், அதிக சம்பளத்தையும் கீர்த்தி சுரேஷ் மிக குறுகிய காலத்தில் பெற்று சாதனை புரிந்ததால் ஏற்பட்ட பூரிப்பு, அது!

***

‘சந்திரமுகி’ படத்தில் பேய் வேடத்தில் நடித்து பயமுறுத்திய ஜோதிகா, அடுத்து அப்படி ஒரு திகில் படத்தில் நடிப்பாரா? (சே.பாண்டியராஜ், பெங்களூரு)

அந்த விருப்பம் ஜோதிகாவுக்கும் இருக்கிறது. அதற்காக அவர் கதை கேட்டு வருகிறாராம்!

***

குருவியாரே, மற்ற கதாநாயகர்களிடம் இருந்து தனுஷ்– சிம்பு இருவரும் எப்படி வேறுபடுகிறார்கள்? (ஆர்.குலசேகரன், ஆழ்வார் திருநகரி)

இரண்டு பேருமே மிக இளம் வயதிலேயே திரையுலகுக்கு வந்ததுடன், தயாரிப்பாளர்களாகவும் மாறி, படங்களை தயாரித்தவர்கள்!

***

விஜய்யும், விக்ராந்தும் உறவினர் என்கிறார்களே...இருவருக்கும் இடையே என்ன உறவு? (கோ.ரங்க நாதன், திருச்சி)

விஜய்யின் சொந்த சித்தி மகன், விக்ராந்த். இரண்டு பேரின் அம்மாக்களும் உடன் பிறந்த சகோதரிகள்!

***

குருவியாரே, நயன்தாரா, திரிஷா, சமந்தா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இடையே அழகி போட்டி நடத்தினால், யாருக்கு வெற்றி கிடைக்கும்? (ஏ.வி.முத்துராம், சென்னை)

எந்த கதாநாயகனின் ஆதரவும் இல்லாமலே தனி ஒருவராக ஜெயிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உள்ளவருக்கு வெற்றி உறுதி!

***

குருவியாரே, சிம்புவுக்கு பெண் பார்த்து வருகிறார்கள் என்ற செய்தி, சில வருடங்களுக்கு முன்பே பேசப்பட்டது. இன்னுமா பெண் அமையவில்லை? (கே.சாரதா,மும்பை)

சிம்புவுக்கு இன்னமும் பெண் பார்த்து வருவது உண்மைதான். சரியான மணமகள் அமையாததால், அவருடைய திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது!

***

அந்த காலத்தில் பி.சுசீலாவுக்கு போட்டியாக எந்த பாடகியும் அமையவில்லையே...? (டி.ஜேக்கப், வேலூர்)

ஒரு காலத்தில், அவருக்கு போட்டியாக எல்.ஆர்.ஈஸ்வரியின் பெயர் பேசப்பட்டது!

***

‘ஜென்டில் மேன்’ புகழ் மதுபாலா வில்லியாக நடிக்கிறாராமே... அந்த படத்தின் பெயர் என்ன, கதாநாயகன்-கதாநாயகி- டைரக்டர் யார்? (கே.கமால் பாட்ஷா, அரக்கோணம்)

மதுபாலா வில்லியாக நடிக்கும் படத்தின் பெயர், ‘அக்னிதேவ்.’ இந்த படத்தின் கதாநாயகன், பாபி சிம்ஹா. கதாநாயகி, ரம்யா நம்பீசன். டைரக்டர், ஜான்!

***

குருவியாரே, நிவேதா பெத்துராஜ், தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக வருவாரா? (எம்.பாஸ்கர், ஈரோடு)

அது, அவர் ஏற்றுக்கொள்ளும் படங்களையும், கதாபாத்திரங்களையும் பொருத்து அமையும்!

***

தமிழ் பட உலகில் சமந்தா நடித்த படங்கள் எல்லாம் வெற்றி பெறுகின்றன என்கிறார்களே...? (சி.ஸ்டீபன்ராஜ், திருபுவனம்)

அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படங்களில், ‘சீமராஜா’ எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லையே...!

***

குருவியாரே, சிவகார்த்திகேயனுக்கு வரமாக அமைந்த அம்சம் எது? (ஜி.பொன்ராஜ், நாகர்கோவில்)

குழந்தை ரசிகர்கள்! குழந்தைகளுக்கு விஜய்யை பிடிப்பது போல் சிவகார்த்திகேயனையும் பிடிக்கிறதாம்!

***

‘96’ படத்தின் வெற்றிக்கும், வசூலுக்கும் காரணம் யார்? (அபிஷேக், தண்டராம்பட்டு)

திரிஷாவின் அழகும், நடிப்பும் ஒரு காரணம். கதாபாத்திரத்துடன் ஒன்றிய விஜய் சேதுபதியின் நடிப்பு, மற்றொரு காரணம்!

***

குருவியாரே, பிரபுவுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த கதாநாயகி யார்? (வி.ஜானகிராமன், தக்கலை)

குஷ்பு! இருவரும் தர்மத்தின் தலைவன், மை டியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, கிழக்குகரை, பாண்டிதுரை, நாளைய செய்தி, மறவன், உத்தமராசா, தர்மசீலன், சின்ன வாத்தியார் ஆகிய 10 படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்!

***

‘அட்டகத்தி’ படத்தின் கதாநாயகன் தினேஷ், ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் கேட்கிறார்? (பி.வி.தட்சிணாமூர்த்தி, பெரம்பலூர்)

தினேஷ், ஒரு படத்துக்கு ரூ.90 லட்சம் கேட்கிறாராம்!

***

குருவியாரே, அமலாபால் தனக்கு போட்டியாக எந்த கதாநாயகியை கருதுகிறார்? (எஸ்.பி.ஜெயசீலன், தேனி)

அமலாபாலின் ஒரே குறி, நயன்தாராதான்! இருவருமே ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் போட்டியை தமிழ் திரையுலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது!

***

‘அவன் இவன்’ படத்தில் இணைந்து நடித்த விஷாலும், ஆர்யாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பார்களா? (இரா.தமிழரசன், தூத்துக்குடி)

இரண்டு பேருக்கும் பொருந்துகிற மாதிரி கதை இருக்கிறதா? இருந்தால், இருவரும் நடிக்க தயாராக இருக் கிறார்கள்!

***

குருவியாரே, நடிகர் ஜீவா என்றாலே நினைவுக்கு வருவது என்ன? (ஆர்.ராமதுரை, தஞ்சை)

“மச்சி, ஒரு குவார்ட்டர் சொல்லு...” என்ற வசனம்தான்!

***

சுந்தர் சி.யின் கவனம் பேய் மற்றும் திகில் படங்கள் பக்கம் திரும்பியிருக்கிறதே...அதன் ரகசியம் என்ன? (ஏ.ஆனந்த், ஓசூர்)

பேய் மற்றும் திகில் படங்களின் வெற்றியும், வசூல் குவிப்பும்தான் அந்த ரகசியங்கள்!

***

தொடர்புடைய செய்திகள்

1. சினிமா கேள்வி பதில்- குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
2. சினிமா கேள்வி பதில் ! குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை–600007