சினிமா செய்திகள்

திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா + "||" + Priyanka Chopra who sold her wedding photos for Rs 18 crore

திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா

திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.
பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் ஜோத்பூரில் அடுத்த மாதம் நடக்கிறது. 36 வயதாகும் பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனாஸ் 10 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகு பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் குடியேறுகிறார்.


இதற்காக அங்குள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர். திருமணத்தை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் திருமண உரிமை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தை இருவரும் சமர்ப்பித்து உள்ளனர்.

இந்த நிலையில் திருமண புகைப்படங்களை பிரபல நிறுவனம் ஒன்று 2.5 மில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய பண மதிப்பில் சுமார் ரூ.18.25 கோடி ஆகும். திருமண புகைப்படங்களை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்றுள்ள பிரியங்கா சோப்ராவின் செயல் மற்ற இந்தி நடிகைகளுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரியங்கா சோப்ராவின் திருமணத்துக்கான அரண்மனை வாடகை ரூ.43 லட்சம்
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
2. ஜோத்பூர் அரண்மனையில் நடக்கிறது : பிரியங்கா சோப்ரா திருமண ஏற்பாடுகள்
இந்தி நட்சத்திர ஜோடி தீபிகா படுகோனே–ரன்வீர்சிங் திருமணம் இத்தாலியில் ஆடம்பரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்து நடிகை பிரியங்கா சோப்ரா–அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ் திருமணத்தில் அனைவரது கவனமும் திரும்பி இருக்கிறது.
3. திருமணத்துக்கு தயாராகிறார் : பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.9 கோடிக்கு நகைகள்
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. குவாண்டிகோ டி.வி. தொடர் மூலம் ஹாலிவுட்டிலும் பிரபலமானார்.
4. பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி? – பாடகர் நிக்ஜோனாஸ்
விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
5. பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்தம் “என் இதயம் உடைந்து விட்டது” -முன்னாள் காதலி வருத்தம்
பிரிங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் நடந்த நிச்சயதார்த்தம் இந்திய திரையுலகிலும் அமெரிக்காவிலும் பரபரப்பான பேச்சாக உள்ளது.