சினிமா செய்திகள்

‘மீ டூ’வால் சினிமா துறை சுத்தமாகும் –நடிகை இலியானா + "||" + The film industry is clean with 'Me Too' - the actress Iliyana

‘மீ டூ’வால் சினிமா துறை சுத்தமாகும் –நடிகை இலியானா

‘மீ டூ’வால் சினிமா துறை சுத்தமாகும் –நடிகை இலியானா
தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்துள்ள இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமாவில் பாலியல் தொல்லைகள் குறித்து அவர் கூறியதாவது:–
‘மீ டூ’வில் நிறைய பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த தொல்லைகளை சொல்கிறார்கள். இது நல்ல மாற்றத்தை கொண்டு வரும். சினிமாவில் மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலுமே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன. அவர்களுடைய கசப்பான அனுபவங்களை ‘மீ டூ’வில் பேசுவது வேதனைக்குரிய வி‌ஷயம்.


பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க கூடாது. ‘மீ டூ’ போராட்டத்தினால் நிறைய இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு குழுக்கள் அமைத்து இருக்கிறார்கள். ‘மீ டூ’வால் எதிர்காலத்தில் சினிமா துறை சிறு பாலியல் சம்பவம் கூட இல்லாமல் சுத்தமாக மாறும் என்று நம்புகிறேன்.

எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் பலரும் பேசினார்கள். எனது திருமணம் குடும்பம் உள்ளிட்ட சொந்த வி‌ஷயங்கள் குறித்து பேச நான் விரும்பவில்லை. எனது நண்பர் ஆண்ட்ரூ உறவு வி‌ஷயத்தில் மிகவும் சந்தோ‌ஷமாக இருக்கிறேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அதற்கு மேல் பேசமுடியாது.

நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுக்கிறேன் என்று பேசுகின்றனர். அது தவறு. இரண்டு மொழிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு இலியானா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தொடர் புரளிகளால் மன அழுத்தம்: இலியானா கொந்தளிப்பு
‘கேடி’, ‘நண்பன்’ ஆகிய படங்களில் நடித்தவர், இலியானா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
2. ரசிகர்கள் ஆவேசம் : வெளிநாட்டவரை இலியானா காதலிக்கலாமா?
தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் மற்றும் கேடி படங்களில் நடித்தவர் இலியானா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.