சினிமா செய்திகள்

முத்தமிட்டு ஒளிப்பதிவாளர் அநாகரிகம் : காஜல் அகர்வால் ரசிகர்கள் எதிர்ப்பு + "||" + Kissing cinematographer Indecently : Kajal Agarwal fans protest

முத்தமிட்டு ஒளிப்பதிவாளர் அநாகரிகம் : காஜல் அகர்வால் ரசிகர்கள் எதிர்ப்பு

முத்தமிட்டு ஒளிப்பதிவாளர் அநாகரிகம் : காஜல் அகர்வால் ரசிகர்கள்  எதிர்ப்பு
தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
பெல்லம் கொண்டா சீனிவாஸ், காஜல் அகர்வால், மெஹ்ரின் ஆகியோர் நடித்துள்ள கவச்சம் என்ற தெலுங்கு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது.

மேடையில் காஜல் அகர்வால் பேசிக்கொண்டு இருந்தபோது அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா கே.நாயுடு திடீரென்று தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று காஜல் அகர்வாலை இறுக்கமாக கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இது காஜல் அகர்வாலுக்கு தர்ம சங்கடமாக இருந்தாலும் சிரித்தபடி வேறு வி‌ஷயங்கள் பற்றி பேச ஆரம்பித்தார்.  ஒளிப்பதிவாளரின் செயல் பார்வையாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. காஜல் அகர்வால் ரசிகர்கள் ஹேஷ்டேக்கை உருவாக்கி ஒளிப்பதிவாளரை கண்டித்து வருகிறார்கள். ‘‘இதுவும் மீ டூ போன்றதுதான். ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை முத்தமிட்டது இழிவான செயல். சோட்டா கே.நாயுடுவை கண்டிக்கிறோம்’’ என்றெல்லாம் கருத்துக்கள் பதிவிடுகிறார்கள்.


இதற்கு விளக்கம் அளித்துள்ள சோட்டா கே.நாயுடு, ‘‘மறைந்த நடிகை சவுந்தர்யாவுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகை காஜல் அகர்வால். உள்நோக்கம் இல்லாமல் சாதாரணமாகவே அவருக்கு முத்தமிட்டேன்’’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை
மேடையில் வைத்து முத்தமிட்ட பிரபல தொழில்நுட்ப கலைஞர், அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால்.
2. விமானம் ஓட்டிய காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் விவேகம், மெர்சல் படங்களுக்கு பிறகு பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார்.
3. ‘‘மம்முட்டி–மோகன்லால் இருவரையும் பிடிக்கும்’’ – காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடித்து கடந்த வருடம் தமிழிலும், தெலுங்கிலும் தலா 4 படங்கள் திரைக்கு வந்தன.
4. ‘அனிருத்’தில், காஜல் அகர்வால்
ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரம்மோற்சவம்’ என்ற தெலுங்கு படத்தை ‘அனிருத்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்கிறார்கள்.
5. எனக்கு ரகசிய திருமணமா? –காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடிகையாகி 14 வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து 50 படங்களை தாண்டி விட்டார்.