சினிமா செய்திகள்

எதிர்ப்பை மீறி வாய்ப்புகள் : விஷால் படத்தில் சன்னி லியோன் + "||" + Despite opposition opportunities: Vishal film Sunny Leone

எதிர்ப்பை மீறி வாய்ப்புகள் : விஷால் படத்தில் சன்னி லியோன்

எதிர்ப்பை மீறி வாய்ப்புகள் : விஷால் படத்தில் சன்னி லியோன்
ஆபாச பட நடிகையான சன்னிலியோன் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு எதிராக மற்ற இந்தி நடிகைகள் திரண்டு புதிய படங்களில் வாய்ப்பு கிடைப்பதை தடுத்து வருகின்றனர்.
 இந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள்.

அதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகிறது. கர்நாடகத்தில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு தடைவிதித்தது. இந்த நிலையில் தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகும் வீரமாதேவி சரித்திர படத்தில் சன்னிலியோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.


இந்த படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடக்கின்றன. மதுரை கோர்ட்டிலும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிக்க தடை விதிக்க வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சன்னிலியோன் நடிக்க கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் வீரமாதேவி படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடக்கிறது. வடிவுடையான் இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.

இந்த நிலையில் அடுத்து விஷாலின் அயோக்கியா படத்துக்கும் சன்னிலியோனை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலில் நிற்காமல் முன்னணி பெற்ற நடிகை சன்னி லியோன்
தேர்தலில் நிற்காக சன்னி லியோன் முன்னணியில் இருப்பதாக செய்திவாசிப்பாளர் ஒருவர் அறிவித்தார்.