சினிமா செய்திகள்

சிரஞ்சீவி படத்தில் ராணி வேடத்தில் நயன்தாரா + "||" + Nayantara in the role of Queen in Chiranjeevi movie

சிரஞ்சீவி படத்தில் ராணி வேடத்தில் நயன்தாரா

சிரஞ்சீவி படத்தில் ராணி வேடத்தில் நயன்தாரா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இப்போது 7 படங்கள் அவர் கைவசம் உள்ளன.
அஜித்குமார் ஜோடியாக நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படம் பொங்கலுக்கு வருகிறது.

தமிழ், தெலுங்கு இந்தியில் தயாராகும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். கர்ணூலை சேர்ந்த உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. சிப்பாய் கலகத்துக்கு முன்பே ஆந்திராவில் சுதந்திர வேட்கையை உருவாக்கியவராக நரசிம்ம ரெட்டி கருதப்படுகிறார்.


படத்தில் 8 நிமிடம் நடக்கும் யுத்தகள காட்சிக்கு மட்டும் ரூ.54 கோடி செலவிட்டு உள்ளனர். அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப்பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் நயன்தாராவின் 34-வது பிறந்த நாளையொட்டி சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ராணியாக நடித்துள்ள நயன்தாராவின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, சுதீப், தமன்னா ஆகியோரும் நடித்துள்ளனர். சிரஞ்சீவி மகனும் முன்னணி தெலுங்கு நடிகருமான ராம்சரண் தயாரிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.