சினிமா செய்திகள்

அக்‌ஷரா ஹாசன் அந்தரங்க படங்களை வெளியிட்டதாக புகார் ; நடிகை ரதியின் மகன் கைதாவாரா? + "||" + Actress Rathi's son arrested?

அக்‌ஷரா ஹாசன் அந்தரங்க படங்களை வெளியிட்டதாக புகார் ; நடிகை ரதியின் மகன் கைதாவாரா?

அக்‌ஷரா ஹாசன் அந்தரங்க படங்களை வெளியிட்டதாக புகார் ; நடிகை ரதியின் மகன் கைதாவாரா?
கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். இவர் தமிழ், தெலுங்கில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.
அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க கவர்ச்சி படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதுகுறித்து அக்‌ஷாரா ஹாசன் மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த படங்கள் ஒரு படப்பிடிப்பின் போட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்டவை என்றும் அவற்றை சமூக வலைத்தளத்தில் கசிய விட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.


சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அக்‌ஷரா ஹாசனின் முன்னாள் காதலரும் நடிகருமான தனுஷ் விர்வானி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இவர், தமிழில் கமல்ஹாசன் ஜோடியாக உல்லாச பறவைகள், ரஜினியுடன் முரட்டுக்காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரதியின் மகன் ஆவார்.

சமூக வலைத்தளத்தில் வெளியான படங்களை அக்‌ஷரா ஹாசன் 5 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் விர்வானியிடம் பகிர்ந்துள்ளார். எனவே அவர்தான் படத்தை வெளியிட்டு இருக்க கூடும் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து தனுஷ் விர்வானியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

படங்களை வெளியிட்டது அவர்தான் என்று உறுதியானால் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் அந்த படங்களை நான் வெளியிடவில்லை என்று தனுஷ் விர்வானி மறுத்துள்ளார்.