சினிமா செய்திகள்

மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசார் வழக்குப்பதிவு + "||" + Case for actress Gayatri Raghuram

மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசார் வழக்குப்பதிவு

மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசார் வழக்குப்பதிவு
மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
சென்னை,

காயத்ரி ரகுராம் திரைப்பட நடிகை மற்றும் நடன பயிற்றுனர் ஆவார். இவர் பிரபல நடனர் ரகுராம் என்பவரின் மகளாவார். காயத்ரி 2002-ம் ஆண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

சார்லி சாப்ளின் படம் மூலம் நடிகையான காயத்ரி ரகுராம், ஸ்டைல், பரசுராம், விசில், விகடன், வை ராஜா வை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார். 

டெலிவிஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். இவர் திரைப்படம் மட்டுமில்லாது, தொலைகாட்சி நிகழ்சிகளிலும் பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில், சென்னை திரு.வி.க.பாலம் பகுதியில் அபிராமபுரம் போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நடிகை காயத்ரி ரகுராம் மதுபோதையில் கார் ஓட்டியது தெரியவந்தது. 

இதனையடுத்து மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ3500 அபராதம் விதித்தனர்.