சினிமா செய்திகள்

‘நீயா-2’ படத்தில் நடித்த 22 அடி நீள ராஜநாகம் + "||" + In the film Neeya 2 22 feet long royal snake

‘நீயா-2’ படத்தில் நடித்த 22 அடி நீள ராஜநாகம்

‘நீயா-2’ படத்தில் நடித்த 22 அடி நீள ராஜநாகம்
‘நீயா-2’ படத்தில் 22 அடி நீள ராஜநாகம் நடித்து இருக்கிறது.
1979 -ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திகில் படம், ‘நீயா.’ அதில் கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, லதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் சாதனையுடன் வெற்றிகரமாக ஓடியது. 39 வருடங்களுக்குப்பின், இந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘நீயா-2’ என்ற பெயரில் தயாராகிறது.

படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்யும் எல்.சுரேஷ் சொல்கிறார்:-

“நீயா படம் ஒரு பாம்பின் கதையாக திரைக்கு வந்தது. அதன் இரண்டாம் பாகத்தை, வேறு ஒரு கதைக்களத்தில் புதிதாக, உணர்ச்சிப்பூர்வமாக உருவாக்கி வருகிறோம். இதில் ஜெய், வர லட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா ஆகியோர் நடிக் கிறார்கள்.

‘நீயா’ படத்தில் இடம் பெற்ற “ஒரே ஜீவன்...” பாடலை இரண்டாம் பாகம் படத்துக்காக மறு உருவாக்கம் செய்து இருக்கிறோம். ஷபீர் இசையமைத்து இருக்கிறார். ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார். ‘நீயா’ படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாம்பு திகிலில் ஆழ்த்தியது. அதுபோலவே இரண்டாம் பாக படத்திலும் 22 அடி நீள ராஜநாகம் நடித்து இருக்கிறது. அது வருகிற காட்சிகள், திகிலாக இருக்கும்.

படப்பிடிப்பு சென்னை, மதுரை, சாலக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.”