ஜெர்மனி சென்றார் குட்டி விமான ஆய்வில் அஜித்குமார்


ஜெர்மனி சென்றார் குட்டி விமான ஆய்வில் அஜித்குமார்
x
தினத்தந்தி 29 Nov 2018 12:00 AM GMT (Updated: 28 Nov 2018 10:22 PM GMT)

அஜித்குமார் விஸ்வாசம் படத்தை முடித்து விட்டு குடும்பத்துடன் கோவா சென்றார். அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு சென்னை திரும்பினார்.

அஜித்துக்கு பைக், கார் பந்தயங்களில் ஈடுபாடு உண்டு. ஏற்கனவே வெளிநாட்டில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்று பரிசு பெற்றார்.

குட்டி விமான தொழில் நுட்பங்களிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. அஜித் ஆலோசகராக இருந்த அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தக்‌ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்து பெருமை சேர்த்தது.

இந்தியாவில் விமானம் ஓட்டும் பைலட் லைசென்ஸ் வைத்துள்ள நடிகர்களில் அஜித்தும் ஒருவர். இப்போது குட்டி விமான தொழில் நுட்பங்களை ஆய்வு செய்வதில் அஜித்குமார் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக ஜெர்மனி சென்றுள்ளார். அங்குள்ள வாரியோ ஹெலிகாப்டர் குழுவினரை சந்தித்து குட்டி விமானத்தை உருவாக்குவது, இயக்குவது சம்பந்தமான தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதுசம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. விஸ்வாசம் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். அடுத்து சதுரங்க வேட்டை படத்தை எடுத்து பிரபலமான வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். இது அவருக்கு 59-வது படம். இந்த படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது. 

Next Story