சினிமா செய்திகள்

எடை கூடியதால் நீக்கம் ராதிகா ஆப்தே வருத்தம் + "||" + Radhika Apte was sad

எடை கூடியதால் நீக்கம் ராதிகா ஆப்தே வருத்தம்

எடை கூடியதால் நீக்கம் ராதிகா ஆப்தே வருத்தம்
உடல் எடை கூடியதால் படத்திலிருந்து ராதிகா ஆப்தே நீக்கப்பட்டார்.
தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், கபாலி ஆகிய படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். 

சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார். மீ டூவில் பாலியல்  புகார்களையும்  வெளியிட்டு  வருகிறார். 

சமீபத்தில் லிப்டில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்கு திரும்பியபோது அதே படத்தில் நடித்த நடிகர் என்னிடம் முதுகை தடவி விடவா என்று கேட்டு அத்துமீறி நடந்தார்’’ என்றார். இப்போது இன்னொரு இயக்குனர் மீது புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

‘‘என்னிடம் ஒரு இயக்குனர் கதை சொல்லி அவரது படத்தில் ஒப்பந்தம் செய்தார். அந்த கதையை எனக்காகவே எழுதியதாகவும் சொன்னார். கதையும் கதாபாத்திரமும் பிடித்தது. அதில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். படப்பிடிப்பு தொடங்க சில நாட்கள் இருந்ததால் ஓய்வுக்காக வெளியூர் சென்றுவிட்டு வந்தேன். 

ஆனால் திடீரென்று என்னை படத்தில் இருந்து நீக்கி விட்டதாக தெரிவித்தனர். நான் அதிர்ச்சியானேன். காரணம் கேட்டபோது எனக்கு உடல் எடை கூடியிருப்பதாக சொன்னார்கள். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் எடையை குறைத்துவிட்டு வருகிறேன் என்றேன். அதை அவர்கள் காது கொடுத்தே கேட்கவில்லை’’

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திறமை இல்லாத வாரிசு நடிகர்களால் நிலைக்க முடியாது –ராதிகா ஆப்தே
வாரிசுகள் என்பதாலேயே பெரிய நடிகர்–நடிகைகள் ஆகி விட முடியாது என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
2. நடிகர்கள் இப்போது தப்பு செய்ய தயங்குகிறார்கள் - ராதிகா ஆப்தே அதிரடி
‘சிந்திக்கும் ஆற்றல் நிறைந்த சிறந்த நடிகை’ என்ற பெயரை பெற்றிருக்கிறார், ராதிகா ஆப்தே. அதுவே அவருக்குத் தனி அடையாளத்தை ஏற் படுத்திக் கொடுத்திருக்கிறது.