சினிமா செய்திகள்

ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்?‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி தோற்றம் வெளியானது + "||" + Petta film Vijay Sethupathi Appearance

ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்?‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி தோற்றம் வெளியானது

ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்?‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி தோற்றம் வெளியானது
‘பேட்ட’ படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி தோற்றம் வெளியானது. ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து அவர் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் மீது ரசிகர்கள் பார்வை திரும்பி உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்துள்ளார். ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா, சசிகுமார், பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் ‘பார்க்கத்தான் போற இந்த காளியோட ஆட்டத்தை, எவண்டா கீழ எவண்டா மேல எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. அதிக எண்ணிக்கையில் கேட்டு உள்ளனர்.

விஜய் சேதுபதி தோற்றம்

இதற்கிடையில், இந்த பாடலை படநிறுவனம் வெளியிடும் முன்பே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு படங்கள்தான் திரைக்கு வரும்போதே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி வந்தது. இப்போது பாடலும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், பேட்ட படத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் தோற்றத்தை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். அதில் விஜய் சேதுபதி கையில் துப்பாக்கியுடன் குரூர தோற்றத்தில் இருக்கிறார். பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. அதை உறுதிபடுத்துவதுபோல் விஜய் சேதுபதி தோற்றம் இருந்தது. இந்த படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா
ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்துக்கு பின் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
2. அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி!
அமீர்கான் நடிக்க இருக்கும் ஒரு புதிய இந்தி படத்தில், அவருடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்.
3. கமல்-ரஜினிக்கு மதுரையில் பிரமாண்ட பாராட்டு விழா - இயக்குனர் பாரதிராஜா திட்டம்
ரஜினி, கமல் ஆகிய இருவரின் திரை உலக சாதனைகளைப் பாராட்டும் விதமாக மதுரையில் பிரமாண்ட விழா நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார்.
4. கதாநாயகி தந்தை வேடத்தில் விஜய் சேதுபதி
கதாநாயகியின் தந்தை வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
5. ரஷியாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’
ரஷியாவில் ரஜினியின் ‘2.0’ திரைப்படம் வெளியாக உள்ளது.