சினிமா செய்திகள்

கையை இழுத்து மானபங்கம்ரசிகர்களை தாக்கிய நடிகை ஜரீன்கான் + "||" + Actress Zarine Khan struck fans

கையை இழுத்து மானபங்கம்ரசிகர்களை தாக்கிய நடிகை ஜரீன்கான்

கையை இழுத்து மானபங்கம்ரசிகர்களை தாக்கிய நடிகை ஜரீன்கான்
தமிழில் நகுல் நடித்த ‘நான் ராஜாவாக போகிறேன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் ஜரீன் கான்.
இந்தியில் சல்மான்கான் நடித்த வீர், ரெடி, ஹவுஸ்புல்-2, ஹேட் ஸ்டோரி உள்பட பல படங்களில் ஜரீன் கான் நடித்துள்ளார். டி.வி தொடர்களிலும் நடித்து வருகிறார். மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடை ஒன்றை திறந்து வைக்க அவரை அழைத்து இருந்தனர். ஜரீன் கானை பார்ப்பதற்காக கடை முன்னால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்றனர். அவர் காரில் இருந்து இறங்கியதும் பாதுகாவலர்கள் பத்திரமாக கடைக்குள் அழைத்துச் சென்றனர்.

கடையை திறந்து வைத்துவிட்டு சிறிது நேரம் சுற்றி பார்த்தார். அதன்பிறகு காரை நோக்கி நடந்து சென்றார். அப்போது பாதுகாவலர்களை தள்ளிவிட்டு ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். கூட்டத்தில் ஜரீன் கான் சிக்கினார். சிலர் அவரை தொட்டனர். கையை பிடித்தும் இழுத்தும் சில்மிஷம் செய்தார்கள்.

ரசிகர்கள் பிடியில் சிக்கி ஜரீன்கான் தவித்தார். பின்னர் தன்னிடம் அத்து மீறியவர்களை ஆவேசமாக தள்ளிவிட்டார். சிலரை அடித்து தாக்கினார். இதனால் சில்மிஷம் செய்தவர்கள் மிரண்டனர். உடனே கடை ஊழியர்களும், பாதுகாவலர்களும் ஜரீன்கானை கூட்டத்தில் இருந்து மீட்டு காரில் ஏற்றி அனுப்பினர். இதுகுறித்து ஜரீன் கான் கூறும்போது “சிலர் என்னை தொட்டு மோசமாக நடந்து கொண்டனர். இதனால் சிலரை அடித்தேன். கூட்டத்தை தள்ளிவிட்டு தப்பினேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்” என்றார்.