சினிமா செய்திகள்

சென்னையில், புத்தாண்டு நிகழ்ச்சியில்சன்னி லியோன் நடனம் ஆட எதிர்ப்பு + "||" + In the New Year show sunny Leone Dance

சென்னையில், புத்தாண்டு நிகழ்ச்சியில்சன்னி லியோன் நடனம் ஆட எதிர்ப்பு

சென்னையில், புத்தாண்டு நிகழ்ச்சியில்சன்னி லியோன் நடனம் ஆட எதிர்ப்பு
சென்னையில் நடக்கும் புத்தாண்டு நிகழ்ச்சியில் சன்னி லியோன் நடனம் ஆட எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஆபாச பட நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.

சன்னி லியோன் படங்களில் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிப்பதாக ஏற்கனவே விமர்சனங்கள் கிளம்பின. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்தி கவர்ச்சி நடிகைகளும் சன்னி லியோனை வெளியேற்ற வேண்டும் என்று எதிர்த்து வருகிறார்கள். கடந்த வருடம் புத்தாண்டையொட்டி பெங்களூருவில் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆபாச நடிகை சன்னி லியோன் நடனம் ஆடினால் கலாசாரம் பாதிக்கும் என்று கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு மிரட்டலும் விடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கர்நாடக போலீசார் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு தடை விதித்தனர்.

இந்த நிலையில் வருகிற புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அவரது ரசிகர்களின் டுவிட்டர் பதிவுகள் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் மேலும் சில நடிகைகளும் ஆடுகிறார்கள். இதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.