சினிமா செய்திகள்

வாழ்க்கை வரலாறு படமாகிறதுஜெயலலிதா வேடத்தில், 2 நடிகைகள்! + "||" + Jayalalithaa's role, 2 actresses!

வாழ்க்கை வரலாறு படமாகிறதுஜெயலலிதா வேடத்தில், 2 நடிகைகள்!

வாழ்க்கை வரலாறு படமாகிறதுஜெயலலிதா வேடத்தில், 2 நடிகைகள்!
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில், 2 நடிகைகள் நடிக்கிறார்கள்.
ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்பு திரைப்படங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் போன்ற பிரபல கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து, தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய கதாநாயகி என்ற பெயருடன் புகழின் உச்சத்தில், அவர் இருந்தார்.

பின்னர் அ.தி.மு.க.வில் சேர்ந்து முதல்-அமைச்சராக 6 முறை பதவி வகித்தார். முதல்-அமைச்சராகவே இறந்தார். அவருடைய வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்க 2 டைரக்டர்கள் முன்வந்துள்ளனர். அவர்களில் ஒருவர், பிரியதர்சினி என்ற பெண் டைரக்டர். இவர், டைரக்டர் மிஷ்கினிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர்.

இவர் டைரக்டு செய்யும் படத்தில், ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் முடிவு செய்யப்படவில்லை. ஜெயலலிதாவாக நடிக்க நித்யா மேனன் பயிற்சி பெற்று வருகிறார். அவருடைய நடை-உடை-பாவனைகள் எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள பழைய தமிழ் படங்களையும், அரசியல் தொடர்பான வீடியோ படங்களையும் பார்த்து வருகிறார்.

படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் 24-ந்தேதி, ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று தொடங்க இருக்கிறது.

இது தவிர, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை யூ டியூப்பில், ‘வெப் சீரியலாக’ கொண்டுவர, டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் முடிவு செய்து இருக்கிறார். அதில் ஜெயலலிதா வேடத்தில், ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.