சினிமா செய்திகள்

‘‘என் தோளில் கை வைத்த திலீப்’’ – நடிகை நவ்யா நாயர் + "||" + '' Dilip who put my hand on my shoulder '' - actress Navya Nair

‘‘என் தோளில் கை வைத்த திலீப்’’ – நடிகை நவ்யா நாயர்

‘‘என் தோளில் கை வைத்த திலீப்’’ – நடிகை நவ்யா நாயர்
தமிழில் அழகிய தீயே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நவ்யா நாயர். தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தார்.
நவ்யா நாயர் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். 2010–ல் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறான்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நவ்யா நாயர் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். சினிமா அனுபவங்கள் குறித்து நவ்யா நாயர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–


நான் நடித்த முதல் மலையாள படம் இஷ்டம். 2001–ல் வெளியானது. டைரக்டர் சிபி மலயில் எனது போட்டாவை பார்த்து விட்டு ஒரு ஓட்டலுக்கு அழைத்து நடிப்பு திறமையை பரிசோதித்தார். அதை வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவை பார்த்த திலீப்புக்கு எனது நடிப்பு பிடித்ததால் இஷ்டம் படத்தில் நடிக்க அவரும், மஞ்சுவாரியரும் என்னை தேர்வு செய்தனர்.

அப்போது வேண்டாம் என்று அவர் ஒதுக்கி இருந்தால் நான் சினிமாவுக்கே வந்து இருக்க முடியாது. அதன் படப்பிடிப்புக்காக போட்டோ ஷூட் எடுத்தனர். அப்போது திலீப் எனது தோளில் கைவைத்தபடி போஸ் கொடுத்தார். உடனே எனக்கு படப்படப்பு ஏற்பட்டது. இதய துடிப்பும் அதிகமானது.

கிராமத்தில் இருந்து வந்த என்மீது அறிமுகம் இல்லாத ஆண் கைவைத்ததால் சங்கடத்துக்கு உள்ளானேன். அதை புரிந்துகொண்ட திலீப் பயப்பட வேண்டாம். எல்லோரும் ஆதரவாக இருப்போம். இந்த படத்தில் ஒன்றாக பணியாற்ற போகிறோம் என்று தைரியம் சொன்னார். அதை எப்போதும் மறக்க முடியாது.’’

இவ்வாறு நவ்யா நாயர் கூறினார்.