சினிமா செய்திகள்

‘‘புகழை ஒருபோதும் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை’’ இளையராஜா பேச்சு + "||" + Glory never lifts up the head Ilayaraja's speech

‘‘புகழை ஒருபோதும் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை’’ இளையராஜா பேச்சு

‘‘புகழை  ஒருபோதும்  தலைக்கு ஏற்றிக்  கொள்வதில்லை’’ இளையராஜா பேச்சு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில், சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவின் 75–வது பிறந்தநாள் விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இளையராஜாவுக்கு  இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.  அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு ஆண்டிப்பட்டி பொறியியல் கல்லூரிக்கு இளையராஜா வந்தார்.

கல்லூரி மாணவ–மாணவிகளுடன் இளையராஜா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இசையின் மேன்மை பற்றியும், இசைத்துறையில் தன்னுடைய அனுபவத்தை பற்றியும் மாணவ–மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டார். அவர் இசையமைத்த சில பாடல்களை மாணவ–மாணவிகள் முன்பாக பாடினார். அப்போது அவர் பேசியதாவது:–

‘‘அறிவார்ந்த சிந்தனைகளால் மனிதர்களிடத்தில் வேற்றுமை இல்லை. மனிதனுடைய அனைத்து செயல்களும் இறைவன் அருளாசியுடன்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறைவன் ஆசியுடன்தான் நான் இந்த அளவுக்கு இசையமைக்கிறேன். என் புகழை ஒருபோதும் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை.

மாணவ–மாணவிகள் தங்கள் சக்தியை முறையாக பயன்படுத்தி, திடமான நம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.’’

இவ்வாறு இளையராஜா பேசினார்.