‘லட்டு- குணமாக சொல்லுங்க’ குழந்தைகளுக்கான படம்


‘லட்டு- குணமாக சொல்லுங்க’ குழந்தைகளுக்கான படம்
x
தினத்தந்தி 1 Jan 2019 7:04 PM IST (Updated: 1 Jan 2019 7:04 PM IST)
t-max-icont-min-icon

வஜ்ரவேல் ஆனந்த் டைரக்டு செய்துள்ள படத்தின் பெயர், ‘லட்டு-குணமாக சொல்லுங்க.’

மறைந்த டைரக்டர் கே.பாலசந்தர் படங்களில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்தவர், வஜ்ரவேல் ஆனந்த். இவர், ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். அந்த படத்தின் பெயர், ‘லட்டு-குணமாக சொல்லுங்க.’

இந்த படத்தில் குணா பாபு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர், இரும்புத்திரை, தமிழ் படம், 2.0, தீரன் அதிகாரம் ஒன்று, காளி ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். கதாநாயகியாக ஸ்வேதா என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார்.

குழந்தை நட்சத்திரங்களாக விஸ்வேஸ்வரன், விக்னேஸ்வரன் நடிக்கிறார்கள். அமுதா ஆனந்த் தயாரிக்க, இணை தயாரிப்பு: பி.ராதாகிருஷ்ணன்.

அம்மா இல்லாத இரட்டையர்களை தந்தை எப்படி வளர்க்கிறார்? என்பதே இந்த படத்தின் கதை. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஒகேனக்கல், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

Next Story