சினிமா செய்திகள்

‘அகம்பாவம்’ படத்தில்துணிச்சல் மிகுந்த பத்திரிகை நிருபராக நமீதா! + "||" + Namita newspaper reporter

‘அகம்பாவம்’ படத்தில்துணிச்சல் மிகுந்த பத்திரிகை நிருபராக நமீதா!

‘அகம்பாவம்’ படத்தில்துணிச்சல் மிகுந்த பத்திரிகை நிருபராக நமீதா!
தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்ட நமீதா, திருமணத்துக்குப்பின் நடிக்கும் படம், ‘அகம்பாவம்.’ இது, சாதி வெறியையும், அதனால் ஏற்படுகிற விளைவுகளையும் பேசுகிற படம்.
தேசிய அளவில் இருந்து வரும் சாதி வெறியை சொல்லும் கதை. இதில், துணிச்சல் மிகுந்த பத்திரிகை நிருபராக நமீதா நடித்து வருகிறார்.

அவருடன் அப்புக்குட்டி, மனோபாலா, மாரிமுத்து ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் வாராஹி பயங்கர வில்லனாக நடிக்கிறார். ஒரு இளம் காதல் ஜோடியும் படத்தில் பங்கேற்கிறார்கள். அருணகிரி இசையமைக்க, மகேஷ் டைரக்டு செய்கிறார். இவர், சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கியவர். 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது.