சினிமா செய்திகள்

ரஷியாவில், அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் படம் + "||" + In Russia, the first Tamil film to be released in high theaters

ரஷியாவில், அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் படம்

ரஷியாவில், அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் படம்
அஜித்குமார் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ வர்த்தக வட்டாரங்களில் மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘விஸ்வாசம்’  படம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வணிக சந்தையை பெற்றுள்ளது.

ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளில், ‘விஸ்வாசம்’ படத்தை வெளியிடுவதற்கான உரிமையை செவன்த் சென்ஸ் சினிமேடிக்ஸ் பிரசாந்த் வாங்கியிருக்கிறார். இவர், 2.0’ படத்தை ரஷியாவில் வெளியிட்டவர். இவர் சொல்கிறார்:-

‘‘ரஷியா, உக்ரைன் ஆகிய 2 நாடுகளிலும் வெளியாகும் முதல் அஜித்குமார் படம் இதுதான். ரஷியாவில் மட்டும் 8-க்கும் அதிகமான நகரங்களில், ‘விஸ்வாசம்’ வெளியாகிறது. பொதுவாகவே குடும்பப்பாங்கான படங்களுக்கு எல்லா நாடுகளிலும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில், அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ ரஷியாவில் அதிக தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகிய மூன்று பேரும் தயாரிக்கிறார்கள். நயன்தாரா, விவேக், தம்பிராமய்யா, ரமேஷ் திலக், யோகி பாபு, கோவை சரளா ஆகியோரும் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து இருக்கிறார்கள்.’’