சினிமா செய்திகள்

வலுவான கதாபாத்திரத்தில் அறிமுகம்: இந்தி பட உலகுக்கு போகிறார், பாவனா ராவ்! + "||" + Introducing a strong role: Hindi film goes to the world, Bhavana Rao!

வலுவான கதாபாத்திரத்தில் அறிமுகம்: இந்தி பட உலகுக்கு போகிறார், பாவனா ராவ்!

வலுவான கதாபாத்திரத்தில் அறிமுகம்: இந்தி பட உலகுக்கு போகிறார், பாவனா ராவ்!
இந்தி பட உலகில் வலுவான கதாபாத்திரத்தில் நடிகை பாவனா ராவ் அறிமுகமாகிறார்.

கொல கொலயா முந்திரிக்கா, விண்மீன்கள், வனயுத்தம் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர், பாவனா ராவ். இவர், கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்த இவர், முதன்முதலாக ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த படத்தின் பெயர், ‘பைபாஸ் ரோட்.’ இதில், நீல் நிதீன் முகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தி படத்தில் நடிப்பது பற்றி பாவனா ராவ் கூறுகிறார்:-

“இது, ஒரு சஸ்பென்ஸ் திகில் படம். கதாநாயகியாக நான் நடிக்கிறேன். வலுவான கதாபாத்திரம், இது. சொகுசாக வாழ விரும்பும் ஒரு பெண், அதற்காக ஒரு குறுக்கு வழியை தேர்வு செய்கிறாள். அதனால் ஏற்படும் விளைவுகளே கதை. படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு பொங்கலுக்கு பின் தொடங்குகிறது. இந்த ஆண்டு மிக சிறப்பாக ஆரம்பமாகி இருக்கிறது” என்கிறார், பாவனா ராவ்!