சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி வாழ்க்கையை படமாக்கும் போனிகபூர் + "||" + Sridevi's life Making a film

ஸ்ரீதேவி வாழ்க்கையை படமாக்கும் போனிகபூர்

ஸ்ரீதேவி வாழ்க்கையை படமாக்கும் போனிகபூர்
நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கப்போவதாக உறுதிப்படுத்தி உள்ளார்.
நடிகர்-நடிகைகள் வாழ்க்கை படங்களாகிறது. ஏற்கனவே மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை ‘த டர்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி என்ற பெயர்களில் வந்தன. இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி ஜெயில் தண்டனை அனுபவித்த இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கையும் படமாகி வெளிவந்தது. தற்போது சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது.

இந்த வரிசையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையையும் படமாக எடுக்க முயற்சிகள் நடந்தன. தற்போது அந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கப்போவதாக உறுதிப்படுத்தி உள்ளார். இவர் ‘பிங்க்’ இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கை அஜித்குமார் நடிக்க தயாரித்து வருகிறார்.

ஸ்ரீதேவி தமிழ், இந்தி, தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர். துபாயில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது ஓட்டல் குளியல் அறை தொட்டியில் நீரில் முழ்கி மரணம் அடைந்தார். ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது.