சினிமா செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட் படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் ஜீவா + "||" + Jeeva Acting Srikanth role in the World Cup cricket film

உலக கோப்பை கிரிக்கெட் படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் ஜீவா

உலக கோப்பை கிரிக்கெட் படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் ஜீவா
உலக கோப்பை கிரிக்கெட் படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்க தேர்வாகி உள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் தெண்டுல்கர் ஆகியோரின் வாழ்க்கை ஏற்கனவே படங்களாகி வெளிவந்தன. அடுத்து முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி வாழ்க்கையும் படமாகிறது. இந்த நிலையில் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்தும் புதிய படம் தயாராகிறது.

இந்த படத்துக்கு ‘83’ என்று தலைப்பு வைத்துள்ளனர். கபீர்கான் இயக்குகிறார். உலக கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கதாபாத்திரத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு நடக்கிறது. கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்க ஜீவா தேர்வாகி உள்ளார்.

இதுகுறித்து ஜீவா கூறியதாவது:-

“இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து தயாராகும் ‘83’ என்ற படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் நான் நடிக்கிறேன். இந்த படம் மூலம் முதன் முதலாக நான் இந்திக்கு செல்கிறேன். பிரமாண்டமான முறையில் இந்த படம் தயாராகிறது. எனக்கு ஏற்கனவே கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு. பல போட்டிகளில் பங்கேற்று கிரிக்கெட் ஆடி இருக்கிறேன்.

எனவே கிரிக்கெட் தொடர்பான ‘83’ படத்தின் படப்பிடிப்பை ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். லகான், எம்.எஸ்.தோனி படங்கள் வரிசையில் ‘1983 உலக கோப்பை’ படமும் வரவேற்பை பெறும்.” இவ்வாறு ஜீவா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
2. உலக கோப்பையை வென்ற கதை: கிரிக்கெட் படத்தில் உதவி இயக்குனராக கபில்தேவ் மகள்
உலக கோப்பையை வென்ற கிரிக்கெட் படத்தில், உதவி இயக்குனராக கபில்தேவ் மகள் பணியாற்றுகிறார்.
3. உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்குமா? - மத்திய சட்ட மந்திரி பதில்
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்குமா? என்ற கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார்.
4. தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன்
தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது என ஹர்பஜன் சிங் மற்றும் அசாருதீன் கூறி உள்ளனர்.
5. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்
உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா மோதும் நாடு தேதி மற்றும் இடம் அறிவிப்பு.