சினிமா செய்திகள்

திரைக்கு வரும் சூர்யாவின் 2 படங்கள் + "||" + Coming to the screen actor Surya 2 Movies

திரைக்கு வரும் சூர்யாவின் 2 படங்கள்

திரைக்கு வரும் சூர்யாவின் 2 படங்கள்
சூர்யா நடித்து கடந்த வருடம் ஜனவரியில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வந்தது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ படமும் கடந்த வருடமே திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் படவேலைகள் முடியாததால் தாமதம் ஏற்பட்டது. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.


ஆனாலும் ‘என்.ஜி.கே’ படம் பற்றிய தகவலை வெளியிடாமல் இருந்தனர். இதனால் ரசிகர்கள் பொறுமை இழந்து படத்தை எப்போது வெளியிடுவீர்கள் என்று செல்வராகவனிடம் கேள்வி விடுத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் ஒருவழியாக என்.ஜி.கே படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக செல்வராகவன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

சூர்யாவுடன் பணிபுரிந்த அனுபவம் இனிமையாக இருந்தது. நிஜமாகவே அவர் திறமையான நடிகர் என்றும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங் பணிகள் தொடங்கி உள்ளன. என்.ஜி.கே படம் விரைவில் திரைக்கு வருகிறது. காப்பான் படமும் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தெரிகிறது.

முதலில் ‘என்.ஜி.கே’ படத்தையும் தொடர்ந்து ‘காப்பான்’ படத்தையும் அடுத்தடுத்து திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு ‘இறுதி சுற்று’ படம் மூலம் பிரபலமான சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.