சினிமா செய்திகள்

காதலரை மணக்கிறார் : நடிகை ரிச்சா திருமண நிச்சயதார்த்தம் + "||" + Actress Richa Wedding Engagement

காதலரை மணக்கிறார் : நடிகை ரிச்சா திருமண நிச்சயதார்த்தம்

காதலரை மணக்கிறார் : நடிகை ரிச்சா திருமண நிச்சயதார்த்தம்
தமிழில் தனுஷ் ஜோடியாக ‘மயக்கம் என்ன’ படத்தில் நடித்து பிரபலமானவர் ரிச்சா கங்கோபாத்யாய்.
சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்திலும் நடித்து இருந்தார். இரண்டு படங்களும் 2011-ல் வெளியானது. இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் ரிச்சாவுக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.

அதன் பிறகு ஆந்திராவுக்கு சென்று சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அங்கும் பெரிய அளவில் அவருக்கு படங்கள் அமையவில்லை. இதனால் 2013-ல் சினிமாவை விட்டு விலகினார். அதன்பிறகு அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.

இந்த நிலையில் ரிச்சாவுக்கும், வெளிநாட்டை சேர்ந்த ஜோ என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட படத்தை ரிச்சா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், “இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜோவும் நானும் பிசினஸ் பள்ளியில் சந்தித்தோம். முதலில் இருவரும் நட்பாக பழகினோம். பின்னர் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

பெங்காலி பெற்றோர்களுக்கு பிறந்து டெல்லியில் வளர்ந்த ரிச்சா கங்கோபாத்யாய் 2007-ல் அமெரிக்காவில் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.