சினிமா செய்திகள்

தனுஷ் பாடலை பாராட்டிய ரம்யாவுக்கு கன்னட ரசிகர்கள் கண்டனம் + "||" + Dhanush praised the song Kannada fans condemned Actress Ramya

தனுஷ் பாடலை பாராட்டிய ரம்யாவுக்கு கன்னட ரசிகர்கள் கண்டனம்

தனுஷ் பாடலை பாராட்டிய ரம்யாவுக்கு கன்னட ரசிகர்கள் கண்டனம்
பிரபல கன்னட நடிகை ரம்யா. இவர் தனுஷ் ஜோடியாக பொல்லாதவன் படத்தில் நடித்தார். குத்து, கிரி, தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2013-ல் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் எம்.பி.யாக தேர்வானார்.

பெங்களூருவில் வசித்து வரும் ரம்யா நடிகர் தனுசை பாராட்டி தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். தனுஷ், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து 2015-ல் வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகம் மாரி-2 என்ற பெயரில் சமீபத்தில் திரைக்கு வந்தது. இதில் தனுஷ்-சாய்பல்லவி ஜோடியாக நடித்து இருந்தனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ என்ற பாடலை உலகம் முழுவதும் 10 கோடி பேர் பார்த்துள்ளனர். இதனை தனுஷ் தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதற்கு நடிகர், நடிகைகள் பலர் பாராட்டு தெரிவித்தனர். நடிகை ரம்யா, தனுசையும் யுவன் ஷங்கர் ராஜாவையும் குறிப்பிட்டு இரண்டு ரவுடிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று டுவிட்டரில் பாராட்டினார்.

இதற்கு கன்னட ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். “கன்னடத்தில் எத்தனையோ படங்கள் வருகின்றன. அதையெல்லாம் பாராட்டாமல் தனுசை பாராட்டிய உங்கள் தமிழ் பாசத்துக்கு நன்றி. யஷ் நடித்துள்ள கே.ஜி.எப் கன்னட படம் பாகிஸ்தானில் வெளியாகி உள்ளது. இந்த படம் ரூ.250 கோடி வசூலித்து உள்ளது. இதை ஏன் பாராட்டவில்லை. அடுத்த முறை தமிழ் நாட்டில் போட்டியிடுங்கள். கர்நாடகாவில் உங்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது. கன்னட படம், பாடல்களை பாராட்டாத உங்களை பார்த்து வெட்கப்படுகிறோம்” என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் கண்டித்துள்ளனர்.