சினிமா செய்திகள்

8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’ + "||" + Picture in 8 countries Indian -2

8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’

8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார்.
கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த படம் இந்தியன். தற்போது இதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார்.


காஜல் அகர்வாலும் சேர்ந்து நடித்து வருகிறார். ஓரிரு வாரத்தில் இங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு கமல்ஹாசன் உள்ளிட்ட பட குழுவினர் வெளிநாட்டுக்கு செல்கின்றனர். அங்கு 2 மாதங்கள் தொடர்ச்சியாக 8 நாடுகளில் இந்தியன்-2 படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க அக்‌ஷய்குமாரை அணுகினர். அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா, பச்சை கிளிகள் தோளோடு பாட்டு குயிலோ மடியோடு, கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா, அக்கடானு நாங்க உடைபோட்டா, மாயா மச்சீந்திரா மச்சம் பாக்க வந்தீரா ஆகிய இனிமையான பாடல்கள் இடம்பெற்று இருந்தன.

இரண்டாம் பாகத்தில் அவருக்கு பதில் அனிருத் இசையமைக்கிறார். படக்குழுவினருக்கு ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை வர்ம கலையை மையமாக வைத்து வடிவமைத்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கமலின் இந்தியன்-2 படம் தயாராவதில் சிக்கல்?
கமலின் இந்தியன்-2 படம் தயாராவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு நாளை தொடக்கம்
கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வந்து வெற்றி பெற்ற படம் இந்தியன்.
3. படத்தை கைவிடவில்லை: 18-ந் தேதி கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பு
கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பு, வரும் 18-ந் தேதி தொடங்க உள்ளது.
4. 14-ந் தேதி தொடங்குகிறது - ‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் கமல்ஹாசன்
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு வரும் 14-ந் தேதி தொடங்குகிறது.