சினிமா செய்திகள்

5 கதாநாயகிகளுடன் ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் படம் + "||" + Jithan Ramesh is acting with 5 heroines

5 கதாநாயகிகளுடன் ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் படம்

5 கதாநாயகிகளுடன் ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் படம்
‘ஜித்தன்’ ரமேஷ் நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
‘ஜித்தன்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், ரமேஷ். இவர், பட அதிபர் ஆர்.பி.சவுத்ரியின் மகன். அறிமுகமான படத்தின் பெயரை அவரது பெயருடன் இணைத்து, ‘ஜித்தன்’ ரமேஷ் என்று அழைக்கப்படுகிறார். ஜெர்ரி, நீ வேணும்டா செல்லம், மதுரை வீரன், புலி வருது, பிள்ளையார் தெரு கடைசி வீடு, ஜித்தன்-2 உள்பட பல படங்களில் நடித்திருக்கும் ‘ஜித்தன்’ ரமேஷ், நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

திகிலுடன், சண்டை காட்சிகள் நிறைந்த நகைச்சுவை படம், இது. ஆர்.எல்.ரவி, ஸ்ரீஜித் ஆகிய இருவரும் டைரக்டு செய்கிறார்கள். படத்தை பற்றி இவர்கள் இருவரும் கூறியதாவது:-

“இந்த படத்தில், ‘ஜித்தன்’ ரமேசுடன் சனுஜா சோம்நாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 புது கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு வேலைக்காக, ஒரு இடத்தில் தங்குகிறார்கள். அங்கே நடக்கும் சம்பவங்களும், அவர்கள் சந்திக்கிற பிரச்சினைகளும்தான் கதை.

வழக்கமாக இந்த மாதிரி படங்களில் ஆண்கள்தான் பெண்களை கிண்டல் செய்வார்கள். ஆனால், இந்த படத்தில் ஆண்களை பெண்கள் கிண்டல் செய்வது புதுசாக இருக்கும். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ரெஜிமோன் இசையமைக்கிறார். வசனம் மற்றும் பாடல்களை முருகன் மந்திரம் எழுதியிருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது”