தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடக்கவில்லை நடிகர் விஷால் பேட்டி


தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடக்கவில்லை நடிகர் விஷால் பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2019 9:45 PM GMT (Updated: 23 Jan 2019 7:03 PM GMT)

“தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிதாக கோடம்பாக்கத்தில் அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிதாக கோடம்பாக்கத்தில் அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது. இதில் படங்களுக்கான ‘மாஸ்ட்ரிங் யூனிட்’ செயல்படும். ரூ.1,000 கோடி புரளும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இப்படி ஒரு அலுவலகம் அமைந்திருப்பது மேலும் பயன்அளிக்கும். இசை யமைப்பாளர் இளையராஜாவுக்கு விழா எடுப்பதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நான் கோர்ட்டை மதிக்கிறேன். தயாரிப்பாளர்கள் சங்கத்திலோ, இளையராஜாவுக்கு விழா நடத்துவதிலோ எந்த முறைகேடும் நடக்கவில்லை. நேர்மையாக செயல்படுகிறோம். விழாவை வழக்கு பாதிக்காது. திட்டமிட்டபடி அடுத்த மாதம் (பிப்ரவரி) 2, 3 ஆகிய தேதிகளில் இளையராஜா விழாவை வெற்றிகரமாக நடத்துவோம்.

மார்ச் 3-ந்தேதி தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்துள் ளோம். அந்த கூட்டத்தில் வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படும். சங்கத்தின் ரூ.7 கோடி வைப்பு நிதியில் ரூ.30 லட்சம் குறைந்துள்ளது என்கின்றனர். சங்க உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு கல்வி, மருத்துவ உதவிகள் வழங்கி வருகிறோம். அதையெல்லாம் வெளியே சொல்ல நான் விரும்பவில்லை”

இவ்வாறு விஷால் கூறினார்.

Next Story