சினிமா செய்திகள்

மம்முட்டி படத்தில் நடிக்க சென்றபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சன்னி லியோன் + "||" + Sunny Leone caught up in the crowd

மம்முட்டி படத்தில் நடிக்க சென்றபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சன்னி லியோன்

மம்முட்டி படத்தில் நடிக்க சென்றபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சன்னி லியோன்
பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவரது கவர்ச்சி சுவரொட்டிகள் மும்பை நகரங்களில் ஒட்டப்பட்டு வழக்கு சர்ச்சைகளிலும் சிக்கினார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளில் தயாராகும் ‘வீரமாதேவி’ சரித்திர படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஏற்கனவே பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோனின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கன்னட அமைப்புகள் எதிர்ப்பினால் ரத்து செய்யப்பட்டது. இப்போது ‘மதுர ராஜா’ என்ற மலையாள படத்தில் மம்முட்டியுடன் நடக்கிறார்.

இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மும்பையில் இருந்து விமானத்தில் கேரளா சென்றார். கொச்சி விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்த அவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். அவரிடம் கைகுலுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தனர். இதனால் சன்னி லியோன் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார்.

உடனே பாதுகாவலர்களும், போலீசாரும் ரசிகர்கள் கூட்டத்தை விலக்கி சன்னி லியோனை மீட்டு காரை நோக்கி அழைத்து சென்றனர். ஆனாலும் அவர் பின்னால் ரசிகர்கள் ஓடினார்கள். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.