சினிமா செய்திகள்

நடிகை அனிஷா அம்புரோஸ் திருமண நிச்சயதார்த்தம் + "||" + Actress Anisa Ambrose Wedding engagement

நடிகை அனிஷா அம்புரோஸ் திருமண நிச்சயதார்த்தம்

நடிகை அனிஷா அம்புரோஸ் திருமண நிச்சயதார்த்தம்
தமிழில் ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் நடித்தவர் அனிஷா அம்புரோஸ், தெலுங்கில் கோபாலா கோபாலா, ரன், மனமந்தா, உன்னாதி சிந்தகி, ஏ நாகரினிகி உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். மலையாள, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
அனிஷா அம்புரோசும், தெலுங்கு நடிகர் ஒருவரும் காதலிப்பதாக பட உலகில் கிசுகிசுக்கள் பரவின. அதனை அவர் மறுத்து வந்தார். இந்த நிலையில் அனிஷா அம்புரோசுக்கும், குணா ஜக்கா என்பவருக்கும் திடீரென்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் ரகசியமாக நடந்துள்ளது.


இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினர் யாரையும் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு அனிஷா அழைக்கவில்லை. குணா சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை. இவர்கள் திருமணம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

திருமணத்துக்கு பிறகு அனிஷா தொடர்ந்து நடிப்பாரா? அல்லது சினிமாவை விட்டு விலகி விடுவாரா என்று தெரியவில்லை.