சினிமா செய்திகள்

ரூ.1.50 லட்சத்தில் உடை, டிராவல் பை பிரியங்கா சோப்ராவின் செல்ல நாய்க்கு வசதிகள் + "||" + Rs.1.50 lakhs Dress, travel bag Priyanka Chopra Pet dog facilities

ரூ.1.50 லட்சத்தில் உடை, டிராவல் பை பிரியங்கா சோப்ராவின் செல்ல நாய்க்கு வசதிகள்

ரூ.1.50 லட்சத்தில் உடை, டிராவல் பை பிரியங்கா சோப்ராவின் செல்ல நாய்க்கு வசதிகள்
பிரியங்கா சோப்ரா அணியும் விலை உயர்ந்த உடைகள், செருப்புகள், கைப்பைகள் ரசிகர்களால் கவனிக்கப்படுகின்றன. இப்போது அவர் வளர்த்து வரும் செல்ல நாய் டயானாவும் பிரபலங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது.
பிரபல இந்தி நடிகை, பிரியங்கா சோப்ரா. ஒரு படத்தில் நடிக்க ரூ.9 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். குவாண்டிகா தொடர் மூலம் ஹாலிவுட்டிலும் பிரபலமாகி உள்ளார். இவருக்கும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் திருமணம் முடிந்துள்ளது. தற்போது ‘ஸ்கை இஸ் பிங்’ என்ற இந்தி படத்திலும் ‘இஸ் நாட் ரொமான்டிக்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார்.


பிரியங்கா சோப்ரா அணியும் விலை உயர்ந்த உடைகள், செருப்புகள், கைப்பைகள் ரசிகர்களால் கவனிக்கப்படுகின்றன. இப்போது அவர் வளர்த்து வரும் செல்ல நாய் டயானாவும் பிரபலங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது. அதன் பெயரிலேயே டைரிஸ் ஆப் டயானா என்ற பக்கத்தை இன்ஸ்டாகிராமில் வைத்துள்ளார். அதை 93 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.

செல்ல நாயுடன் அதிக நேரம் செலவிடுகிறார். ஷாப்பிங் செல்லும்போதும் கூடவே அழைத்து செல்கிறார். இப்போது அந்த நாய்க்கு விசேஷமாக வடிவமைத்த உடையை வாங்கி அணிவித்து இருக்கிறார். அது பயணிக்க ‘டிராவல் பை’ ஒன்றையும் வாங்கி இருக்கிறார். அதற்குள் புதிய உடையுடன் அந்த நாய் இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.

டயானாவுக்காக டிராவல் வீட்டை ஆழகாக வடிவமைத்து கொடுத்த மிமிக்கு நன்றி என்று அதில் பதிவிட்டுள்ளார். இந்த உடை மற்றும் டிராவல் வீடு(பை) செலவு ரூ.1.50 லட்சம் என்று கூறப்படுகிறது.