சின்னத்திரை-ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள்


சின்னத்திரை-ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள்
x
தினத்தந்தி 28 Jan 2019 10:00 PM GMT (Updated: 28 Jan 2019 8:21 PM GMT)

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 4 அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் தலைவராக ரவிவர்மா தேர்வாகி உள்ளார்.

ஆடுகளம் நரேன் செயலாளராகவும் ஜெயந்த் பொருளாளராகவும் மனோபாலா, ராஜ்காந்த் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் அசோக் சாமுவேல், மோகன், விஜய் ஆனந்த், கற்பகவள்ளி ஆகியோர் இணை செயலாளர்களாகவும் தேர்வானார்கள்.

செயற்குழு உறுப்பினர்களாக ரவி சங்கர், பிர்லா, சதிஷ், வெங்கட் கிருஷ்ணன், ஈஸ்வர் ரகுநாதன், சின்னி ஜெயந்த், ரிஷி, டி.பி. கஜேந்திரன், வைரமணி, ஸ்ரீதேவி, சிவகவிதா, நீபா, தீபாஸ்ரீ, ஆர்த்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். லியாகத் அலிகான், தம்பித்துரை ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தேர்தலை நடத்தினார்கள்.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பி.சி.ஸ்ரீராம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவர் பூவே பூச்சூடவா, மவுன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஏ.கார்த்திக் ராஜா, எஸ்.சரவணன் ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். மற்ற பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

Next Story