சினிமா செய்திகள்

ரசிகர்கள் கூட்டத்தில் கங்கனா ரணாவத்தை கிள்ளிய விஷமி + "||" + Crowd of fans Gangana Ranavath touched people

ரசிகர்கள் கூட்டத்தில் கங்கனா ரணாவத்தை கிள்ளிய விஷமி

ரசிகர்கள் கூட்டத்தில் கங்கனா ரணாவத்தை கிள்ளிய விஷமி
தமிழில் தாம்தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
‘குயின்’ படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ரீமேக் ஆகிறது. ஜான்சி ராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்த மணிகர்னிகா படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் அவர் சிறப்பாக நடித்து இருந்ததாகவும் மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்றும் பாராட்டுகள் குவிகின்றன.


இந்தி நடிகை ராணிமுகர்ஜி சமீபத்தில் பெண்கள் தங்களை பாதுகாத்துகொள்ள தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு விமர்சனங்கள் கிளம்பின. இந்த நிலையில் கங்கணா ரணாவத் அவருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“பெண்களே தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் உதவியை எதிர்பார்க்க கூடாது. நான் 16 வயதில் அப்படி நினைத்து இருந்தால் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டேன். அடுத்தவர்கள் உங்களை பாதுகாக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? குற்றம் செய்பவர்கள் அது தவறு என்று தெரிந்தே செய்கிறார்கள்.

நான் ரசிகர்கள் கூட்டத்தின் நடுவில் நின்றபோது ஒரு விஷமி என் பின்னால் கிள்ளிவிட்டு உன்னால் என்ன செய்ய முடியும்? என்று திமிராக பார்த்துக்கொண்டு நின்றான். எனவே நமது பாதுகாப்புக்கு மற்றவர்களை எதிர்பார்க்க கூடாது.” இவ்வாறு அவர் கூறினார்.