சினிமா செய்திகள்

காதலர் தினத்தில் கார்த்தியின் ‘தேவ்’ படம் + "||" + Karthi's dev Movie on Valentine's Day

காதலர் தினத்தில் கார்த்தியின் ‘தேவ்’ படம்

காதலர் தினத்தில் கார்த்தியின் ‘தேவ்’ படம்
கார்த்தி நடித்த ‘தேவ்’ படத்தை பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.
கார்த்தி நடித்து கடந்த வருடம் கடைக்குட்டி சிங்கம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வசூலும் பார்த்தது. அதன்பிறகு தேவ் என்ற படத்தில் நடித்தார். கதாநாயகியாக ரகுல்பிரீத் சிங் நடித்தார். தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்பட மேலும் பலர் நடித்துள்ளனர். ரஜத் ரவிசங்கர் இயக்கினார்.

தேவ் ஒரு பயணத்தை மையமாக வைத்து காதல், குடும்ப உறவுகள், சண்டை ஆகியவற்றை உள்ளடக்கிய படமாக தயாரானது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்தியா முழுவதும் 55 இடங்களில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். இந்த படத்தை தணிக்கைக்கு அனுப்பினர்.

தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து யு சான்றிதழ் அளித்து உள்ளனர். இந்த படத்தை அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி காதலர் தினத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். இதனை கார்த்தியும் சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

அடுத்து மாநகரம் படத்தை இயக்கி பிரபலமான லோகேஷ் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார்.

கதாநாயகி இல்லாத படமாக தயாராகிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. மாநகரம் படம் சிறந்த திரைக்கதையில் வந்த படமாக பாராட்டுகள் கிடைத்தன. எனவே கார்த்தி படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...