“40 வயதுக்கு பிறகே வாழ்க்கையை அனுபவிக்கிறேன்” - நடிகை வித்யா பாலன்


“40 வயதுக்கு பிறகே வாழ்க்கையை அனுபவிக்கிறேன்” - நடிகை வித்யா பாலன்
x
தினத்தந்தி 4 Feb 2019 3:30 AM IST (Updated: 4 Feb 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

பிரபல இந்தி நடிகை வித்யா பாலன். இவர் சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘த டர்டி பிக்சர்’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். ஒரு படத்தில் நடிக்க ரூ.6 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். 2012-ல் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டார்.

தெலுங்கில் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதை படத்தில் அவரது மனைவி பசவதாரகம் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது அஜித் ஜோடியாக இந்தி ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடிப்பதன் மூலம் தமிழுக்கும் வந்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

வித்யா பாலன் தற்போது 40 வயதை தாண்டியுள்ளார். இந்த வயதிலும் கதாநாயகியாக நடிப்பதை பலரும் வியப்பாக பேசுகிறார்கள். இதுகுறித்து வித்யாபாலன் கூறியதாவது:-

“பெண்களை சிறுவயதில் இருந்தே வெட்கப்பட வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார்கள். இதனால் பாலியல் சம்பந்தமான விஷயங்களில் கூட முழுமையாக ஈடுபடுவது இல்லை. பெண்கள் 40 வயதை கடந்த பிறகுதான் குறும்புத்தனமாகவும் சூடாகவும் மாறுகிறார்கள். 20 வயதுகளில் கனவை நோக்கி எனது வாழ்க்கை நகர்ந்தது. 30 வயதுகளில் என்னை பற்றி அறிவதில் காலங்கள் நகர்ந்தன. 40 வயதுக்கு பிறகுதான் வாழ்க்கையை அனுபவிக்கிறேன்.” இவ்வாறு வித்யா பாலன் கூறியுள்ளார்.

Next Story