சினிமா செய்திகள்

‘யூ’ சான்றிதழுடன் சேரன் படம் தணிக்கை ஆனது + "||" + Cheran became a film audit

‘யூ’ சான்றிதழுடன் சேரன் படம் தணிக்கை ஆனது

‘யூ’ சான்றிதழுடன் சேரன் படம் தணிக்கை ஆனது
கடந்த 2015-ம் ஆண்டுக்கு பின் அவர் இயக்கியுள்ள திரைப்படம், ‘திருமணம்’.
பிரபல இயக்குனர் சேரன் ‘பாரதி கண்ணம்மா’வில் தொடங்கி பல வெற்றிப்படங்களை இயக்கிய நிலையில், கடந்த 2015-ம் ஆண்டுக்கு பின் அவர் இயக்கியுள்ள திரைப்படம், ‘திருமணம்’. இந்த படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு திருமணத்தில் மணமகன்-மணமகள் வீட்டார்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள் மிக இயல்பாக இந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை 4 நிமிட டிரைலரில் இருந்து தெரியவந்தது.

இந்த நிலையில், படத்தின் தணிக்கை தகவல்கள் வெளிவந்துள்ளது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்து விட்டதை அடுத்து மிக விரைவில் அதிகாரப்பூர்வமான ‘ரிலீஸ்’ தேதி அறிவிக்கப்படவுள்ளது.

சேரன், சுகன்யா, உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பாலசரவணன், ஜெயப்பிரகாஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவும், பொன்னுவேல் தாமோதரன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.