சினிமா செய்திகள்

ஒரு ‘கட்’ கூட இல்லாமல் தணிக்கையான படம், மானசி’ + "||" + Film censorship Manasi

ஒரு ‘கட்’ கூட இல்லாமல் தணிக்கையான படம், மானசி’

ஒரு ‘கட்’ கூட இல்லாமல் தணிக்கையான படம், மானசி’
ஆடு வளர்ப்பதை மையப்படுத்தி, காதலும் திகிலும் கலந்து, ‘மானசி’ என்ற படம் தயாராகி இருக்கிறது.
‘மானசி’ படத்தில் புதுமுகங்கள் நரேஷ்குமார், ஹரிசா பேகம் ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்துள்ளனர். ஷிவ்ராம் இசையமைத்து இருக்கிறார். நவாஸ் சுலைமான் டைரக்டு செய்ய, மேத்யூ ஜோசப், பாகின் முகமது ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.

படத்தை பற்றி டைரக்டர் நவாஸ் சுலைமான் சொல்கிறார்:-

“கதைப்படி, கதாநாயகன் ஆடு வளர்க்கிறார். இந்த தருணத்தில், கோவில்களில் கிடா வெட்டக்கூடாது என்று ஒரு சட்டம் வருகிறது. அதன் விளைவுகளே படத்தின் கதை. தேனி, போடி, கம்பம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ஒரு ‘கட்’ கூட கொடுக்காமல், அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.”