சினிமா செய்திகள்

தாய் அம்ரிதாவுடன் தகராறுவீட்டை விட்டு வெளியேறிய சாரா அலிகான்? + "||" + Dispute with Mother Amrita Sarah Ali Khan who left home

தாய் அம்ரிதாவுடன் தகராறுவீட்டை விட்டு வெளியேறிய சாரா அலிகான்?

தாய் அம்ரிதாவுடன் தகராறுவீட்டை விட்டு வெளியேறிய சாரா அலிகான்?
இந்தி திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான சயீப் அலிகான்-அம்ரிதா சிங் தம்பதியின் மகள் சாரா அலிகான்.
ந்தி திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான சயீப் அலிகான்-அம்ரிதா சிங் தம்பதியின் மகள் சாரா அலிகான். சில வருடங்களுக்கு முன்பு அம்ரிதா சிங்கை சயீப் அலிகான் விவாகரத்து செய்துவிட்டு கரினா கபூரை 2-வது திருமணம் செய்துகொண்டார். சாரா அலிகானுக்கு 23 வயது ஆகிறது.

இவர் கடந்த வருடம் திரைக்கு வந்த கேதார்நாத், சிம்பா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கேதார்நாத் படம் வரவேற்பை பெற்றது. இந்த வருடம் மேலும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தாய் அம்ரிதா சிங்குடன் வசித்து வந்த சாரா அலிகான் இப்போது திடீரென்று வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் தனது பொருட்களை எடுத்து காரின் பின் டிக்கியில் போட்டுக்கொண்டு வீட்டைவிட்டு புறப்படுவதுபோன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த படத்தை பார்த்த இந்தி பட உலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். தாயிடம் தகராறு செய்துவிட்டு வெளியேறினார் என்றும், மேற்கத்திய கலாசாரத்தை போல் தனியாக வசிக்க முடிவு செய்து புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார் என்றும் இரண்டு கருத்துகள் இந்தி பட உலகில் பரவி வருகின்றன.