சினிமா செய்திகள்

வலைத்தளத்தில் சர்ச்சை படங்கள்கவர்ச்சிக்கு மாறிய பிரியா ஆனந்த் + "||" + Glamorous Priya Anand

வலைத்தளத்தில் சர்ச்சை படங்கள்கவர்ச்சிக்கு மாறிய பிரியா ஆனந்த்

வலைத்தளத்தில் சர்ச்சை படங்கள்கவர்ச்சிக்கு மாறிய பிரியா ஆனந்த்
நடிகை பிரியா ஆனந்த் அரைகுறை உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
நடிகைகள் பட வாய்ப்புகள் குறையும்போது அரைகுறை உடையில் கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த படங்களை பார்க்கும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய அவர்களை அணுகுவார்கள் என்று நம்புகின்றனர். 

இந்தி நடிகைகள் மத்தியில் இந்த நம்பிக்கை அதிகமாக உள்ளது. இதனால் கவர்ச்சி படங்களையும், நீச்சல் உடை படங்களையும் அடிக்கடி வலைத்தளத்தில் பரவ விடுகிறார்கள். இப்போது தமிழ், தெலுங்கு நடிகைகளையும் அது தொற்றி உள்ளது. முன்னணி நடிகைகளும், புதுமுக நடிகைகளும் கவர்ச்சி படங்களை வலைத்தளத்தில் பதிவேற்றுகின்றனர். 

அந்த வரிசையில் இப்போது பிரியா ஆனந்தும் சேர்ந்துள்ளார். இவர் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இங்கிலீஸ் விங்கிலீஸ், வை ராஜா வை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் தமிழில் படங்கள் இல்லை. மலையாளத்திலும், கன்னடத்திலும் தலா ஒரு படத்தில் நடித்து இருந்தார். தற்போது தமிழில் எல்.கே.ஜி. என்ற படத்தில் நடித்துள்ளார். 

மலையாளத்திலும் ஒரு படம் கைவசம் உள்ளது. எதிர்பார்த்த மாதிரி பெரிய படங்கள் அவருக்கு அமையவில்லை. இந்த நிலையில் பிரியா ஆனந்த் அரைகுறை உடையில் தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த சர்ச்சை படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.