சினிமா செய்திகள்

மலையாள பட அதிபர்கள் மீதுநடிகை கனிகுருஷ்தி பாலியல் புகார் + "||" + Actress Kanikurushti complaint

மலையாள பட அதிபர்கள் மீதுநடிகை கனிகுருஷ்தி பாலியல் புகார்

மலையாள பட அதிபர்கள் மீதுநடிகை கனிகுருஷ்தி பாலியல் புகார்
பிரபல மலையாள நடிகை கனிகுருஷ்தி மலையாள பட அதிபர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
பட வாய்ப்பு தருவதற்கு படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பலர் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகை சேர்ந்தவர்கள் இதில் சிக்கி உள்ளனர். இந்த குற்றச்சாட்டை மறுத்து நடிகர்களில் சிலர் கோர்ட்டுக்கு சென்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழில் பிசாசு, பர்மா படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகை கனிகுருஷ்தியும் இப்போது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

“திரையுலகில் நான் எப்போதும் ஒரு நடிகையாகவே இருக்க விரும்புகிறேன். ஆனாலும் இங்கு சில பிரச்சினைகள் உள்ளன. மலையாள பட அதிபர்கள், பெண்களை போதை பொருளாகவே பார்க்கிறார்கள். நடிகைகள் தங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

படுக்கைக்கு உடன்பட மறுத்தால் பட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. என்னை சிலர் வெளிப்படையாகவே அழைத்தனர். சினிமாவில் நீடிப்பதை கடினமாக உணர்ந்தேன். அதுபோன்ற பட வாய்ப்புகள் வேண்டாம் என்று நான் மறுத்துவிட்டேன்.

ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் அவர்கள் ஆசைக்கு இணங்க என்னை வற்புறுத்தும்படி எனது தாயிடமே கூறினார்கள். இதனால் சினிமாவை விட்டு விலகவும் முயன்றேன். இப்போது ‘மீ டூ’ இயக்கம் மற்றும் மலையாள நடிகைகளுக்கான சங்கம் போன்றவைகளால் மாற்றங்கள் வந்துள்ளன.”

இவ்வாறு கனிகுருஷ்தி கூறினார்.