10 ஆண்டு சினிமா வாழ்க்கையில் 30 ஆண்டு அனுபவம் -காஜல் அகர்வால்


10 ஆண்டு சினிமா வாழ்க்கையில் 30 ஆண்டு அனுபவம் -காஜல் அகர்வால்
x
தினத்தந்தி 21 Feb 2019 11:30 PM GMT (Updated: 21 Feb 2019 7:44 PM GMT)

10 ஆண்டு சினிமா வாழ்க்கை 30 ஆண்டு அனுபவத்தை கொடுத்துள்ளது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியான மகிழ்ச்சியில் இருக்கிறார் காஜல் அகர்வால். மேலும் 2 தமிழ் படங்களும், ஒரு தெலுங்கு படமும் கைவசம் உள்ளன. காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

எந்த துறையில் இருக்கும் பெண்களும் தனது வயதை கேட்டால் சொல்ல தயங்குவார்கள். அதிலும் கதாநாயகிகளாக நடிப்பவர்கள் வயதை சொல்வதே இல்லை. ஆனால் நான் அப்படி இல்லை. எனது உண்மையான வயதை சொல்ல தயங்குவது இல்லை. நடிகைகள் திரையில் தங்களை குறைந்த வயது பெண்ணாக காட்டுவதற்கு படாதபாடுபடுகிறார்கள்.

என்னிடம் வயதை கேட்டால் இன்னும் 10 ஆண்டுகள் அதிகமாக சொல்ல நான் ரெடி. காரணம் சினிமாவில் நிறைய அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது. வேறு எந்த துறையில் இருந்தாலும் இவ்வளவு அனுபவம் கிடைத்து இருக்காது.

திறமையான நடிகர்களுடன் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பை பெற்றேன். எத்தனையோ புதிய விஷயங்கள் தெரிய வந்துள்ளது. இப்போது நான் ரொம்ப முதிர்ச்சியாகி இருக்கிறேன். எந்த பிரச்சினை வந்தாலும் அதற்கு என்னிடம் தீர்வு இருக்கிறது. யார் எந்த பிரச்சினையை சொன்னாலும் யோசித்து முடிவு சொல்லி விடுகிறேன்.

10 ஆண்டு சினிமா வாழ்க்கை 30 ஆண்டு அனுபவத்தை எனக்கு தேடி கொடுத்து உள்ளது. அதனால் வயது பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.’‘

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

Next Story