சினிமா செய்திகள்

தீவிபத்தில் உயிர் தப்பிய நடிகை + "||" + The actress survived the fire

தீவிபத்தில் உயிர் தப்பிய நடிகை

தீவிபத்தில் உயிர் தப்பிய நடிகை
மும்பையில் உள்ள சவும்யா தாண்டன் வீட்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அவர் காயமின்றி தப்பினார்.
இந்தி நடிகை சவும்யா தாண்டன். இவர் பாபிஜி கர் பர்ஹெய்ன் என்ற டி.வி தொடரில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாக இருக்கிறார். மும்பையில் உள்ள சவும்யா தாண்டன் வீட்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பொருட்கள் எரிந்து நாசமானது. சவும்யா தாண்டன் குடும்பத்தினருடன் காயமின்றி தப்பினார்.

எரிந்து போன வீட்டை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். வீட்டில் தூங்கும்போது கொசுவை விரட்ட பயன்படுத்தும் திரவ மெஷினை மின் இணைப்பில் வைத்து வீட்டு தூங்கி உள்ளார். இதுவே தீவிபத்துக்கு காரணமாகி விட்டதாக கூறப்பட்டது.

இதுபோன்ற தவறுகளை மற்றவர்கள் செய்ய வேண்டாம் என்று வலைத்தளத்தில் சவும்யா தாண்டன் அறிவுறுத்தி உள்ளார். எனது வீட்டில் நடந்த தீவிபத்து எனக்கு படிப்பினையை கொடுத்து உள்ளது தூங்கும்போது கொசுவிரட்ட பயன்படுத்தும் மெஷினில் மின் இணைப்பை துண்டித்து விட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சவும்யாவின் கணவர் சவுரப் தேவேந்திரா சிங். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது.