சினிமா செய்திகள்

2 படங்களில் இருந்துநடிகை ரகுல் பிரீத் சிங் நீக்கம்? + "||" + Actress Ragul Breathe Singh Removal

2 படங்களில் இருந்துநடிகை ரகுல் பிரீத் சிங் நீக்கம்?

2 படங்களில் இருந்துநடிகை ரகுல் பிரீத் சிங் நீக்கம்?
நடிகை ரகுல் பிரீத் சிங் ஒப்பந்தமான 2 படங்களில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ரகுல்பிரீத் சிங். சமீபத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த தேவ் படம் திரைக்கு வந்தது. அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடித்த என்.ஜி.கே படம் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். 2 இந்தி படங்களும் கைவசம் உள்ளன.

சமீப காலமாக ரகுல் பிரீத் சிங் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன. இந்தநிலையில் ஏற்கனவே ஒப்பந்தமான 2 படங்களில் இருந்து அவரை நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் விஷ்ணு விஷால்-அமலாபால் ஜோடியாக நடித்து வெற்றிபெற்ற ராட்சசன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர்.

இதில் பெல்லம் கொண்டா சீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க ரகுல் பிரீத் சிங்கை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் இப்போது திடீரென்று அவரை நீக்கி விட்டு ராஷிகன்னாவிடம் பேசி வருகிறார்கள். அதிக சம்பளம் கேட்டதால் ரகுல் பிரீத் சிங்கை நீக்கியதாக பேசப்படுகிறது.

இதுபோல் நாக சைதன்யா நடிக்கும் வெங்கி மாமா படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் ரகுல் பிரீத் சிங்கை ஒப்பந்தம் செய்து இருந்தனர். இப்போது அந்த படத்தில் இருந்தும் அவரை நீக்கி விட்டு நபா நடேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.