கோவை முருகானந்தத்தின் கண்டுபிடிப்பை மையமாகக் கொண்ட ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது -முழு பட்டியல்


கோவை முருகானந்தத்தின் கண்டுபிடிப்பை மையமாகக் கொண்ட ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது -முழு பட்டியல்
x
தினத்தந்தி 25 Feb 2019 5:18 AM GMT (Updated: 25 Feb 2019 5:18 AM GMT)

91-வது ஆஸ்கர் விருது சிறந்த நடிகைக்கான விருது ஒலிவியா கோல்மேனுக்கும், சிறந்த இயக்குனர் விருது அல்போன்சோ குவாரனுக்கும் கிடைத்து உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது.

சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை ”கிரீன் புக்” திரைப்படம் பெற்றது. பீட்டர் ஃபரோலி இயக்கிய இந்த படம் அமெரிக்கா பியானோ இசைக்கலைஞர் டான் ஷிரோலியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. கிரீன் புக் திரைப்படம் மூன்று  ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் வென்றுள்ளது.

இதில் இஃப் ப்பீல் ஸ்ட்ரீட் குட் டாக் படத்தில் நடித்த ரெஜினா கிங் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். சிறந்த ஆவணப்படமாக ப்ரீ சோலோ படமும், வைஸ் படத்திற்கு சிறந்த ஒப்பனைக்கான விருதும் வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு என பிளாக் பேந்தர் படத்திற்கு தொடக்கத்திலேயே 2 விருதுகள் கிடைத்துள்ளது.

கோவையைச் சேர்ந்த நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் , மலிவு விலையில் நாப்கின்களை அறிமுகப்படுத்தினார். அவ்வப்போது பல இடங்களுக்கு சென்று பெண்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றார். 

இவரது மலிவு விலை நாப்கின்கள் மற்றும்  இந்திய  பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதிகளை எடுத்துச் சொல்வதை மையமாகக் கொண்டு ஆவணக் குறும்படமாக ‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ எனும் பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தினை குனேட் மோங்கா தயாரித்திருந்தார். 

இப்படம் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆவணக் குறும்படமாக ஆஸ்கர் விருது விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மலிவு விலை நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் கூறுகையில், ‘இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைப்பதன் மூலம் சர்வதேச அளவில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்’ என கூறினார். இப்படத்தில் முருகானந்தம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது ரோமா படத்திற்காக  இயக்குனர் அல்போன்சோ குவாரனுக்கு வழங்கப்பட்டது.

* சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது தி ஃபேவரைட் படத்திற்காக நடிகை ஒலிவியா கோல்மேனுக்கு வழங்கப்பட்டது.

* சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது போகிமியான் ரஃப்சோடி படத்தில் நடித்த ராமி மாலேக்கு வழங்கப்பட்டது.

* சிறந்த துணை நடிகைக்கான விருது ரெகினா கிங்குக்கு கிடைத்தது. 

* சிறந்த படத்தொகுப்புக்கான விருதையும் போஹமியன் ராப்சோடி படம் தட்டிச் சென்றது. இப்படத்தின் படத்தொகுப்பாளர் ஜான் ஓட்மேனுக்கு விருது வழங்கப்பட்டது.

* கிரீன் புக் படத்தில்  நடித்த மேஹர்ஷலா அலி சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.

*  ஸ்பைடர்மேன் - இண்டு தி ஸ்பைடர் வெர்ஸ் (spiderman -into the spider verse)  படம் சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதைப் பெற்றது.

* சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை பிஏஓ (BAO) படம் தட்டிச் சென்றது.

* ஸ்பெஷல் விசுவல்  எபெக்ட்ஸ்க்கான திரைப்படமாக - பர்ஸ்ட் மேன் (first man) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Next Story